புதன், 10 ஏப்ரல், 2019

அளவான பொருட்களை வைத்திருப்பது அற்பத்தனமா?


             கடைகளுக்கு எப்பொழுது சென்றாலும் வாங்க வேண்டிய பொருட்கள் தவிர ஏதோ ஒன்றையாவது கூடுதலாக வாங்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அதன் தேவை அச்சமயத்தில் இருக்காது.

 அது கடைகளின் விளம்பர யுக்திகளால் இருக்கலாம் அல்லது  அதிக பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் இருக்கலாம்.சில சமயங்களில் நமது நண்பர்களின் வீட்டில் உள்ள பொருட்களை தேவை இன்றி நாமும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

அதுவும் இந்த நுகர்வு கலாச்சாரம் அதிகரித்துவிட்ட பிறகு, ஒரு வீட்டில் பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருக்க வேண்டிய சூழல்  உருவாகிவிடுகிறது.அதிகமான பொருட்கள் எந்தவிதத்திலும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடாது.





குறைவான பொருட்கள்,வீட்டின் செல்வாக்கு அல்லது கௌரவத்தை குறைத்து விடாது.மாறாக மாற்றுச் சிந்தனை மற்றும் மாற்றுச் செயல்களுக்கு வழிவகுக்கிறது.

நமது தேவைகளை வரிசைப்படுத்தி பட்டியலிடும் வரை எளிமையாக வாழ்வது என்பது இயலாத ஒன்று.

அளவான பொருட்களால் நாம் அடையும் 5 பயன்கள்:

1. அன்றாட செயல்களை எளிமைப்படுத்துகிறது.
2. நமது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
3. மனம் தெளிவு பெறுகிறது
4.பதற்ற நிலையை குறைக்கிறது
5.பணம் மிச்சம் அடைகிறது

அதனால் அதிகம் வைத்திருந்தால் அள்ளிக் கொடுங்கள்.அளவாக வைத்திருந்தால் ஆனந்தம் கொள்ளுங்கள். 






1 கருத்து: