வியாழன், 20 டிசம்பர், 2018

இறப்பு


இறப்பு

மனிதன் இறந்தால் மண் ஆகிறான்
மண் இறந்தால் என்ன ஆகும் ?
அதனால் நாம் நம்

கரம் கொண்டு
மரம் வைக்கவா இல்லை செயற்கை
உரம் வைக்கவா

என்று முடிவு செய்வோம்...

திங்கள், 17 டிசம்பர், 2018

வந்தாள் வென்றாள்✌

மகளாய்  வந்தாள்,
மாணவியாய் வந்தாள்,
சக பயணியாய் வந்தாள்,
சக ஊழியராய் வந்தாள்,
மனைவியாய் வந்தாள்,
அம்மாவாய் வந்தாள் ,
அத்தையாய் வந்தாள்,
சித்தியை வந்தாள்,
பெரியம்மாவாய் வந்தாள்,
அப்பத்தாவாய் வந்தாள்,
அம்முச்சியாய் வந்தாள்,
பாட்டியாய் வந்தாள்,
பூட்டியாய் வந்தாள்,

வரும் அனைத்திலும்
தோழியாகி வென்றாள்!!!!!
பெண் !!!!!!!

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

பள்ளிக்கு சென்ற முதல் நாள்!!!


பள்ளிக்கு சென்ற முதல் நாள்!!!
நினைவில்  இனிக்கும்
நீண்ட வரிசையில்
நெடு நேரம்
நின்று பெற்ற
தின்பண்டம்

செல்வ மகனை பள்ளியில் விட்டு வந்த முதல் நாள்....
வீடு  வந்தால்
நீண்ட அமைதி
இல்லை இல்லை
நீண்ட நிசப்தம் 

கதை கதையாம்



"கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் தோரணமாம்
தோரணத்தில் ஒரு தூக்கண்ணங்குருவியாம் "
என்று

சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழும்  காலம்/களம்
இனி இங்கே இணையத்தில்  தானோ ??




புதன், 29 ஆகஸ்ட், 2018

ஏக்கமும் ஏமாற்றமும்

ஏக்கமும் ஏமாற்றமும்

எதுவாயினும், இல்லை என்றால் ஏக்கம்
அதுவே இருந்து  விட்டு இல்லை என்றால் ஏமாற்றம்

எதிர்பார்ப்பு இல்லை என்றாலோ
ஏக்கமும் இல்லை
ஏமாற்றமும் இல்லை...

புதன், 8 ஆகஸ்ட், 2018

கனவு கலைந்து விட்டால் !!!!!!


நம்  வாழ்வில்

நம்மை  வாழ வைத்தவர்கள் மடியலாம்
நாம்  பார்த்து   வாழ்ந்தவர்கள்  மடியலாம்
நம்மை வாழ்த்தியவர்கள் மடியலாம்
நம்மைப்போல  வாழ வேண்டியவர்கள் மடியலாம்
அவ்வளவு ஏன்,
சில  நேரங்களில் வயிற்றில் வளரும் கரு கூட  மடியலாம்

ஆனால்
வரலாறு மட்டும் வளர்ந்து  கொண்டே  இருக்கும்

அதனால்
கனவு கலைந்துவிட்டால் கவலையில் மடிந்து விடாதே மனமே!
இதுவும் கடந்து போகுமென  எதையும் கடந்து வா மனமே!!
வருத்தம்  நீக்கி வரலாறு படைக்கலாம் நீயே!!!