புதன், 8 ஆகஸ்ட், 2018

கனவு கலைந்து விட்டால் !!!!!!


நம்  வாழ்வில்

நம்மை  வாழ வைத்தவர்கள் மடியலாம்
நாம்  பார்த்து   வாழ்ந்தவர்கள்  மடியலாம்
நம்மை வாழ்த்தியவர்கள் மடியலாம்
நம்மைப்போல  வாழ வேண்டியவர்கள் மடியலாம்
அவ்வளவு ஏன்,
சில  நேரங்களில் வயிற்றில் வளரும் கரு கூட  மடியலாம்

ஆனால்
வரலாறு மட்டும் வளர்ந்து  கொண்டே  இருக்கும்

அதனால்
கனவு கலைந்துவிட்டால் கவலையில் மடிந்து விடாதே மனமே!
இதுவும் கடந்து போகுமென  எதையும் கடந்து வா மனமே!!
வருத்தம்  நீக்கி வரலாறு படைக்கலாம் நீயே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக